/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி
/
காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி
ADDED : பிப் 25, 2025 10:51 PM

துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி முன்னேறியது.
துபாயில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆஸ்திரேலியாவின் பாபிரின் ஜோடி, குரோஷியாவின் மேட் பவிக், எல் சால்வடாரின் மார்செலோ ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 4-6 என இழந்தது. இரண்டாவது செட்டை 'டை பிரேக்கர்' வரை சென்று 7-6 என வசப்படுத்தியது. பின் நடந்த சூப்பர் டை பிரேக்கரில் பாம்ப்ரி ஜோடி, 10-3 என எளிதாக கைப்பற்றியது.
ஒரு மணி நேரம், 28 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி, 4-6, 6-7, 10-3 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய்சுந்தர் பிரசாந்த் ஜோடி, 4-6, 6-7 என ஆஸ்திரேலியாடின் பீர்ஸ், பிரிட்டனின் முர்ரே ஜோடியிடம் போராடி வீழ்ந்தது.

