/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஐ.டி.எப்., டென்னிஸ்: ஜீவன்-ராம்குமார் அபாரம்
/
ஐ.டி.எப்., டென்னிஸ்: ஜீவன்-ராம்குமார் அபாரம்
ADDED : ஜன 15, 2026 08:47 PM

சென்னை: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ஜீவன், ராம்குமார் ஜோடி முன்னேறியது.
சென்னையில், ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் ஜோடி, பிரான்சின் பெலிக்ஸ் பால்ஷா, ருமேனியாவின் மிஹாய் கோமன் ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரஜ்வல் தேவ், அபினவ் சஞ்ஜீவ் சண்முகம் மோதினர். இதில் பிரஜ்வல் 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சித்தார்த் ராவத், மனாஸ் மோதினர். இதில் சித்தார்த் 6-4, 6-1 என வெற்றி பெற்றார்.
மற்ற 2வது சுற்றுப்போட்டிகளில் இந்தியாவின் மணிஷ், ஹிதேஷ் சவுகான் தோல்வியடைந்தனர்.

