/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஐ.டி.எப்., டென்னிஸ்: பைனலில் ராஷ்மிகா
/
ஐ.டி.எப்., டென்னிஸ்: பைனலில் ராஷ்மிகா
ADDED : அக் 12, 2024 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: கர்நாடகாவின் மைசூருவில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரியா பாட்யா மோதினர். இதில் ராஷ்மிகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் லட்சுமி பிரபா, அமெரிக்காவின் ஜெஸ்சி அனி மோதினர். இதில் ஏமாற்றிய லட்சுமி பிரபா 1-6, 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரியா பாட்யா, அமெரிக்காவின் ஜெஸ்சி அனி ஜோடி 6-1, 6-1 என இந்தியாவின் ஸ்மிருதி, சோகா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.