/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஐ.டி.எப்., டென்னிஸ்: காலிறுதியில் சசிக்குமார்
/
ஐ.டி.எப்., டென்னிஸ்: காலிறுதியில் சசிக்குமார்
ADDED : ஆக 22, 2024 11:51 PM

பாங்காக்: ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் சசிக்குமார் முகுந்த் முன்னேறினார்.
தாய்லாந்தில், ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், சீனாவின் பெங்யு லுா மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய சசிகுமார், இரண்டாவது செட்டை 6-2 என வென்றார். முடிவில் சசிக்குமார் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் விஷ்ணவர்தன், சுவீடனின் லியோ போர்க் மோதினர். இதில் ஏமாற்றிய விஷ்ணுவர்தன் 4-6, 7-6, 6-7 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் நிதின் சின்ஹா 2-6, 4-6 என ரஷ்யாவின் இலியா சிமாகினிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.