/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மூன்றாவது சுற்றில் கெனின்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
/
மூன்றாவது சுற்றில் கெனின்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
மூன்றாவது சுற்றில் கெனின்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
மூன்றாவது சுற்றில் கெனின்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
ADDED : மே 29, 2024 10:36 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மூன்றாவது சுற்றுக்கு அமெரிக்காவின் சோபியா கெனின் முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், பிரான்சின் கரோலின் கார்சியா மோதினர். அபாரமாக ஆடிய கெனின் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜபீர் 6-3, 1-6, 6-3 என கொலம்பியாவின் கமிலா ஓசோரியோவை தோற்கடித்தார்.
ஜோகோவிச் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட் மோதினர். இதில் அபாரமாக ஆடிய 'நடப்பு சாம்பியன்' ஜோகோவிச் 6-4, 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரண்டாவது சுற்று போட்டியில் கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் டேனியல் அல்ட்மேயர் மோதினர். இரண்டு மணி நேரம், 43 நிமிடம் நீடித்த போட்டியில் சிட்சிபாஸ் 6-3, 6-2, 6-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-3, 6-4, 2-6, 6-2 என நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை வீழ்த்தினார்.
பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன.