/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
கிரெஜ்சிகோவா 'நம்பர்-10': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
/
கிரெஜ்சிகோவா 'நம்பர்-10': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
கிரெஜ்சிகோவா 'நம்பர்-10': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
கிரெஜ்சிகோவா 'நம்பர்-10': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஜூலை 15, 2024 11:09 PM

லண்டன்: டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செக்குடியரசின் கிரெஜ்சிகோவா 10வது இடத்துக்கு முன்னேறினார்.
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் செக்குடியரசின் கிரெஜ்சிகோவா, 32வது இடத்தில் இருந்து 'நம்பர்-10' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், தனது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் வெளியான தரவரிசையில் 'நம்பர்-2' இடம் பிடித்திருந்தார்.
விம்பிள்டனில் பைனல் வரை சென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி, 7வது இடத்தில் இருந்து முதன்முறையாக 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். முதல் நான்கு இடங்களில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரைபாகினா நீடிக்கின்றனர்.
ஆண்களுக்கான ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 'நடப்பு விம்பிள்டன் சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துக் கொண்டனர். இந்தியாவின் சுமித் நாகல், 73வது இடத்தில் இருந்து 68வது இடத்துக்கு முன்னேறினார்.