தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/மாயா ஆட்டம் ஆரம்பம்

மாயா ஆட்டம் ஆரம்பம்

மாயா ஆட்டம் ஆரம்பம்


UPDATED : அக் 12, 2026 09:13 PM

ADDED : அக் 12, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 09:13 PM ADDED : அக் 12, 2026 08:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‘‘ஐ.டி.எப்., டென்னிசில் சாம்பியன் ஆனது ஆரம்பம் தான். சீனியர் அரங்கில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்,’’ என மாயா தெரிவித்துள்ளார்.

இந்திய இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா, 17. டென்னிஸ் ஜாம்பவான் நடால், அகாடமியில் (ஸ்பெயின்) பட்டை தீட்டப்பட்டார். சமீபத்தில் தெற்கு பிரான்சில் உள்ள எலைட் டென்னிஸ் மையத்தில் இணைந்தார்.

லாகோஸில் நடந்த ஐ.டி.எப்., தொடரில் அசத்திய மாயா, ஒற்றையர், இரட்டையர் பிரிவில் சாம்பியன ஆனார்.

இதுகுறித்து மாயா கூறியது:

சர்வதேச டென்னிஸ் அரங்கில் முதல் பட்டம் வென்றது மகிழ்ச்சி. தொழில்ரீதியிலான டென்னிசில் கால்பதித்த எனக்கு இது நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. எனினும் இது ஆரம்பம் தான். அடுத்து சீனியர் அரங்கிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி கொடுத்துள்ளது.

வரும் நாட்களில் பல்வேறு தொடர்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன். தொடர்ந்து, பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் (தற்போது 1073 வது இடம்) முன்னேற்றம் அடைய வேண்டும். இதற்கேற்ப, மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். வரும் சில மாதங்களில் உடற்தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளேன். இதனால் போட்டிகளில் காயம் அடையாமல் விளையாடலாம். இந்தியாவின் சானியா மிர்சா ஜாம்பவான் வீராங்கனை. எனது ஹீரோ, அவரை யாராலும் முந்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சானியாவை முந்தினார்

தொழில்ரீதியிலான டென்னிஸ் அரங்கில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் ஆன இந்தியாவின் இளம் வீராங்கனை என, வரலாறு படைத்தார் மாயா (17 வயது, 3 மாதம்). முன்னதாக 22 ஆண்டுக்கு முன் 2004ல் சானியா மிர்சா (17 வயது, 10 மாதம்) சாதித்து இருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us