/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
பாரிஸ் மாஸ்டர்ஸ்: ஸ்வெரேவ் 'சாம்பியன்'
/
பாரிஸ் மாஸ்டர்ஸ்: ஸ்வெரேவ் 'சாம்பியன்'
ADDED : நவ 03, 2024 10:03 PM

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையரில் ஜெர்மனியின் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பிரான்சின் உகோ ஹம்பர்ட் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய ஸ்வெரேவ், இரண்டாவது செட்டையும் 6-2 என தன்வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 15 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்வெரேவ் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் கோப்பை வென்றார். இது, இவரது 7வது மாஸ்டர்ஸ் பட்டம். ஏற்கனவே இத்தாலி (2017, 2024), கனடா (2017), மாட்ரிட் (2018, 2021), சின்சினாட்டி (2021) மாஸ்டர்ஸ் தொடர்களில் கோப்பை வென்றிருந்தார். தவிர இது, இவரது 23வது ஏ.டி.பி., ஒற்றையர் பட்டம்.
பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பை வென்ற 2வது ஜெர்மனி வீரரானார் ஸ்வெரேவ். ஏற்கனவே போரிஸ் பெக்கர், மூன்று முறை (1986, 1989, 1992) இத்தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார்.