/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ராம்குமார்-மைனேனி 2வது இடம்: சென்னை ஓபன் டென்னிசில்
/
ராம்குமார்-மைனேனி 2வது இடம்: சென்னை ஓபன் டென்னிசில்
ராம்குமார்-மைனேனி 2வது இடம்: சென்னை ஓபன் டென்னிசில்
ராம்குமார்-மைனேனி 2வது இடம்: சென்னை ஓபன் டென்னிசில்
ADDED : பிப் 08, 2025 10:04 PM

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் ராம்குமார், மைனேனி ஜோடி 2வது இடம் பிடித்தது.
சென்னையில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி ஜோடி, ஜப்பானின் ஷின்டாரோ மோச்சிசுகி, கைடோ உசுகி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 4-6 என இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 4-6 எனக் கோட்டைவிட்டது.
ஒரு மணி நேரம், 6 நிமிடம் நீடித்த பைனலில் முடிவில் ராம்குமார், மைனேனி ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.
ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் எலியாஸ், பிரிட்டனின் பில்லி ஹாரிஸ் மோதினர். அபாரமாக ஆடிய எலியாஸ் 7-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் பிரான்சின் கைரியன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் டாலிபர் ஸ்வர்சினாவை வீழ்த்தினார்.