ADDED : மார் 02, 2025 08:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாண்டியாகோ: சிலி ஓபன் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ரித்விக் சவுத்ரி, கொலம்பியாவின் நிக்கோலஸ் பாரியன்டோஸ் ஜோடி சாம்பியன் ஆனது.
சிலியில், ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரித்விக் சவுத்ரி, கொலம்பியாவின் நிக்கோலஸ் பாரியன்டோஸ் ஜோடி, அர்ஜென்டினாவின் மேக்சிமோ கோன்சலஸ், ஆன்ட்ரஸ் மோல்டெனி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ரித்விக் ஜோடி, இரண்டாவது செட்டை 6-2 என தன்வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 3 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ரித்விக், பாரியன்டோஸ் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.