UPDATED : அக் 07, 2026 09:40 PM
ADDED : அக் 07, 2026 08:16 PM
டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வியாடெக்
பீஜிங்: சீனாவின் பீஜிங்கில், பெண்களுக்கான சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில், போலந்தின் இகா ஸ்வியாடெக் 25, அமெரிக்காவின் இவா ஜோவிச் 18, மோதினர். இதில் ஸ்வியாடெக் 6–1, 6–3 என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 3–6, 3–6 என, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சிடம் தோல்வியடைந்தார். காலிறுதியில் ஸ்வியாடெக், மெர்டென்ஸ் மோதுகின்றனர்.
டென்னிஸ்: பெர்ரேட்டினி வெற்றி
ஷாங்காய்: சீனாவில், ஏ.டி.பி., ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலியின் மேட்டியோ பெர்ரேட்டினி, அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிச் மோதினர். இதில் பெர்ரேட்டினி 6–7, 6–1, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
கால்பந்து: அமெரிக்கா அபாரம்
செயின்ட் பால்: அமெரிக்காவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அமெரிக்கா, கனடா அணிகள் மோதின. ஜஸ்டின் எல்லிஸ் (29வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கைகொடுக்க, அமெரிக்க அணி 1–0 என வெற்றி பெற்றது. இது, சர்வதேச நட்பு கால்பந்தில் அமெரிக்காவுக்கு வரிசையாக கிடைத்த 4வது வெற்றியானது. ஏற்கனவே பெரு (4–1), சிலி (4–2), மெக்சிகோ (3–0) அணிகளை வீழ்த்தி இருந்தது.
