ADDED : ஏப் 27, 2024 10:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயுனிங்: சீனாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ருடுஜா போசாலே, நெதர்லாந்தின் பெய்ஜ் மேரி ஜோடி, தைவானின் டிசென் சோ, ஹுசுவான் சோவை சந்தித்தது.
முதல் செட்டை ருடுஜா ஜோடி 5-7 என இழந்தது. அடுத்த செட்டை 7-6 என வசப்படுத்தியது. வெற்றியாளரை முடிவு செய்யும் சூப்பர் டை பிரேக்கரில் 12-10 என வென்றது. 2 மணி நேரம், 32 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 5-7, 7-6, 12-10 என போராடி வென்று, சாம்பியன் ஆனது.

