ADDED : மே 07, 2024 09:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகுவோகா: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் காலிறுதிக்கு ருடுஜா ஜோடி முன்னேறியது.
ஜப்பானில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருடுஜா போசாலே, நியூசிலாந்தின் பெய்ஜ் மேரி ஜோடி, தாய்லாந்தின் மனன்சயா, ஜப்பானின் எரி ஷிமிஜு ஜோடியை எதிர்கொண்டது.
இதன் முதல் செட்டை ருடுஜா ஜோடி 6-4 என வசப்படுத்தியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடி 6-3 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 10 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று ஜப்பானின் கவாகுச்சி மோரிசகி ஜோடியை சந்திக்க உள்ளது.