/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மூன்றாவது சுற்றில் சபலென்கா: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
/
மூன்றாவது சுற்றில் சபலென்கா: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
மூன்றாவது சுற்றில் சபலென்கா: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
மூன்றாவது சுற்றில் சபலென்கா: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
ADDED : மே 30, 2024 10:44 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மூன்றாவது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா, உக்ரைனின் ஸ்விடோலினா உள்ளிட்டோர் முன்னேறினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானின் மோயுகா உச்சிஜிமா மோதினர். இதில் சபலென்கா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-4 என நெதர்லாந்தின் அரன்ட்சா ரஸ்சை தோற்கடித்தார். உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-4, 7-6 என பிரான்சின் டயான் பாரியை வீழ்த்தி, 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜப்பானின் நவோமி ஒசாகா மோதினர். 'நடப்பு சாம்பியன்' ஸ்வியாடெக் 7-6, 1-6, 7-5 என போராடி வெற்றி பெற்றார்.
மெத்வெடேவ் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிச் மோதினர். இதில் மெத்வெடேவ் 6-1, 5-0 என முன்னிலையில் இருந்த போது செர்பிய வீரர் காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து மெத்வெடேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-0, 6-3, 6-4 என ஹங்கேரியின் பேபியான் மரோசனை தோற்கடித்தார்.
மற்றொரு 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ராபர்டோ கார்பால்ஸ் மோதினர். 'நடப்பு சாம்பியன்' ஜோகோவிச் 6-4, 6-1, 6-2 என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் ஜெர்மனியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6, 6-2, 6-2 என பெல்ஜியத்தின் டேவிட் கோபினை வீழ்த்தினார்.