/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
மூன்றாவது சுற்றில் சபலென்கா: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
/
மூன்றாவது சுற்றில் சபலென்கா: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
மூன்றாவது சுற்றில் சபலென்கா: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
மூன்றாவது சுற்றில் சபலென்கா: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
ADDED : ஜன 21, 2026 10:11 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப், ஸ்பெயினின் அல்காரஸ் உள்ளிட்டோர் முன்னேறினர்.
மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் ஜுவோஜுவான் பாய் மோதினர். அபாரமாக ஆடிய சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-2, 6-2 என, செர்பியாவின் டேனிலோவிச்சை வீழ்த்தினார். உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 7-5, 6-1 என போலந்தின் லிண்டா கிலிமோவிகோவாவை தோற்கடித்தார்.
மற்ற 2வது சுற்று போட்டிகளில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, டயானா ஷ்னைடர், இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி, செக்குடியரசின் கரோலினா முச்சோவா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
அல்காரஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேன் மோதினர். இதில் அல்காரஸ் 7-6, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-7, 6-2, 6-2, 6-1 என செர்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச்சை வென்றார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 4-6, 6-3, 6-4 என, பிரான்சின் அலெக்சாண்டர் முல்லரை தோற்கடிததார். மற்ற 2வது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் டாமி பால், பிரிட்டனின் கேமிரான் நோரி, ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ், ஆன்ட்ரி ரப்லெவ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
பாம்ப்ரி ஜோடி அபாரம்
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் ஆன்ட்ரி கோரன்சன் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த், குரூஸ் ஹெவிட் ஜோடியை வீழ்த்தியது.

