/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
சினியாகோவா ஜோடி சாம்பியன்: விம்பிள்டன் கலப்பு இரட்டையரில்
/
சினியாகோவா ஜோடி சாம்பியன்: விம்பிள்டன் கலப்பு இரட்டையரில்
சினியாகோவா ஜோடி சாம்பியன்: விம்பிள்டன் கலப்பு இரட்டையரில்
சினியாகோவா ஜோடி சாம்பியன்: விம்பிள்டன் கலப்பு இரட்டையரில்
ADDED : ஜூலை 11, 2025 10:22 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் செக்குடியரசின் சினியாகோவா, நெதர்லாந்தின் வெர்பீக் ஜோடி கோப்பை வென்றது.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் நெதர்லாந்தின் செம் வெர்பீக், செக்குடியரசின் கேடரினா சினியாகோவா ஜோடி, பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி, பிரேசிலின் லுாயிசா ஸ்டெபானி ஜோடியை சந்தித்தது. இரண்டு மணி நேரம், 2 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய வெர்பீக், சினியாகோவா ஜோடி 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.
இது, கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையரில் சினியாகோவா கைப்பற்றிய முதல் பட்டம். கிராண்ட்ஸ்லாம் இரட்டையரில் இவர் வென்ற 11வது பட்டம். ஏற்கனவே பெண்கள் இரட்டையரில் 10 முறை (ஆஸி., ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் தலா 3, யு.எஸ்., ஓபனில் 1) கோப்பை வென்றிருந்தார். வெர்பீக், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.