/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் * பெங்களூரு டென்னிசில் அபாரம்
/
இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் * பெங்களூரு டென்னிசில் அபாரம்
இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் * பெங்களூரு டென்னிசில் அபாரம்
இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் * பெங்களூரு டென்னிசில் அபாரம்
ADDED : பிப் 13, 2024 09:54 PM

பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சுமித் நாகல்.
பெங்களூருவில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், பிரான்சின் ஜெப்ரேவை சந்தித்தார். சமீபத்தில் சென்னையில் நடந்த சாலஞ்சர் தொடரில் கோப்பை வென்ற சுமித் நாகல், முதல் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.
தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 28 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுரேஷ் குமார், சாய் கார்த்தீக் ஜோடி, பிரான்சின் பிட்டவுன், ஜான்வியர் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 2-6 என நழுவவிட்ட இந்திய ஜோடி அடுத்த செட்டையும் 7-6 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய ஜோடி 6-2, 6-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.