/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஸ்வியாடெக், அல்காரஸ் 'சாம்பியன்': இந்தியன் வெல்ஸ் டென்னிசில்
/
ஸ்வியாடெக், அல்காரஸ் 'சாம்பியன்': இந்தியன் வெல்ஸ் டென்னிசில்
ஸ்வியாடெக், அல்காரஸ் 'சாம்பியன்': இந்தியன் வெல்ஸ் டென்னிசில்
ஸ்வியாடெக், அல்காரஸ் 'சாம்பியன்': இந்தியன் வெல்ஸ் டென்னிசில்
ADDED : மார் 18, 2024 10:47 PM

இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போலந்தின் ஸ்வியாடெக், ஸ்பெயினின் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கிரீசின் மரியா சக்காரி மோதினர்.
அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கோப்பை வென்றார். இதற்கு முன் 2022ல் நடந்த இத்தொடரின் பைனலில் சக்காரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் ஸ்வியாடெக் கைப்பற்றிய 19வது பட்டம். தவிர நடப்பு சீசனில் 2வது பட்டத்தை வென்றார். கடந்த மாதம் கத்தார் ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.
அல்காரஸ் அசத்தல்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ் மோதினர். அசத்தலாக ஆடிய அல்காரஸ் 7-6, 6-1 என வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2வது முறையாக கோப்பை வென்றார். கடந்த ஆண்டு நடந்த இத்தொடரின் பைனலில் மெத்வெடேவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

