/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிசில்
/
ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிசில்
ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிசில்
ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிசில்
ADDED : செப் 05, 2024 09:41 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதியில் போலந்தின் ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா இஸ்வியாடெக், 6வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்வியாடெக் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு காலிறுதியில் செக்குடியரசின் கரோலினா முச்சோவா, பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியா மோதினர். அபாரமாக ஆடிய முச்சோவா 6-1, 6-4 என வெற்றி பெற்றார். அரையிறுதியில் முச்சோவா, பெகுலா மோதுகின்றனர்.
அரையிறுதியில் சின்னர்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ் மோதினர். இரண்டு மணி நேரம், 39 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சின்னர் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 3-6, 5-7, 2-6 என பிரிட்டனின் ஜாக் டிராபரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.