/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஸ்வியாடெக் 'ஹாட்ரிக்' சாம்பியன்: பிரெஞ்ச் ஓபனில் ஆதிக்கம்
/
ஸ்வியாடெக் 'ஹாட்ரிக்' சாம்பியன்: பிரெஞ்ச் ஓபனில் ஆதிக்கம்
ஸ்வியாடெக் 'ஹாட்ரிக்' சாம்பியன்: பிரெஞ்ச் ஓபனில் ஆதிக்கம்
ஸ்வியாடெக் 'ஹாட்ரிக்' சாம்பியன்: பிரெஞ்ச் ஓபனில் ஆதிக்கம்
ADDED : ஜூன் 08, 2024 11:22 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் போலந்தின் ஸ்வியாடெக் 'ஹாட்ரிக்' பட்டம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பைனலில் உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக் 23, உலகின் 'நம்பர்-15' இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 28, மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய ஸ்வியாடெக், இரண்டாவது செட்டை 6-1 என வென்றார்.
ஒரு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த பைனலில் அசத்திய ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தொடர்ச்சியாக 3வது முறையாக (2022, 2023, 2024) கோப்பை வென்றார். இதன்மூலம் பெல்ஜியத்தின் ஜஸ்டின் கெனினுக்கு பின் (2005-2007) பிரெஞ்ச் ஓபனில் 'ஹாட்ரிக்' பட்டம் வென்ற வீராங்கனையானார். பிரெஞ்ச் ஓபனில் 4வது முறையாக (2020, 2022-24) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வியாடெக், தனது 5வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே யு.எஸ்., ஓபனில் (2022) சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். பைனலில் அசத்திய ஸ்வியாடெக், கோப்பையுடன் ரூ. 21.5 கோடி பரிசு வென்றார்.
சாதிப்பாரா அல்காரஸ்
ஆண்கள் ஒற்றையர் பைனலில் இன்று உலகின் 'நம்பர்-3' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 21, உலகின் 'நம்பர்-4' ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 27, மோதுகின்றனர். ஏ.டி.பி., அரங்கில் இவர்கள் மோதிய 9 போட்டியில், ஸ்வெரேவ் 5, அல்காரஸ் 4ல் வெற்றி பெற்றனர். பிரெஞ்ச் ஓபனில் 2வது முறையாக மோதுகின்றனர். 2022ல் நடந்த காலிறுதியில் ஸ்வெரேவ் வெற்றி பெற்றார்.
இன்று அல்காரஸ் வென்றால் தனது 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றலாம். ஸ்வெரேவ் அசத்தினால் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லலாம்.