/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
நான்காவது சுற்றில் ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்
/
நான்காவது சுற்றில் ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்
நான்காவது சுற்றில் ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்
நான்காவது சுற்றில் ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்
ADDED : மே 31, 2025 12:17 AM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றுக்கு ஸ்வியாடெக், சபலென்கா உள்ளிட்டோர் முன்னேறினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு 3வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா 6-2, 6-3 என செர்பியாவின் டேனிலோவிச்சை வீழ்த்தினார். சீனாவின் கின்வென் ஜெங் 6-3, 6-4 என கனடாவின் விக்டோரியா மபோகோவை தோற்கடித்தார். அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 7-6, 6-4 என டென்மார்க்கின் கிளாரா டாசனை வென்றார். ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவா 6-2, 6-3 என உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி 4-6, 6-4, 6-3, 6-2 என அர்ஜென்டினாவின் மரியானோ நவோனை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் 6-4, 7-6, 7-6 என போர்ச்சுகலின் நுனோ போர்ஹெசை வென்றார்.
இரண்டாவது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 என பிரான்சின் கோரென்டினை தோற்கடித்தார்.