
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜிபு: ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா, ருடுஜா ஜோடி தோல்வியடைந்தன.
ஜப்பானில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ருடுஜா போசாலே, பிரிட்டனின் சாரா பேத் ஜோடி, பிரிட்டனின் புரூக், ஹாங்காங்கின் ஈடைஸ் சோங் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6-2 என வென்ற ருடுஜா ஜோடி அடுத்த செட்டை 1-6 என இழந்தது. அடுத்து 'சூப்பர் டை பிரேக்கரிலும்' 7-10 என கோட்டை விட்டது. முடிவில் ருடுஜா ஜோடி 6-2, 1-6, 7-10 என தோல்வியடைந்தது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்ப்ரே, நெதர்லாந்தின் ஹர்டோனா ஜோடி, கனடாவின் ரெபெக்கா, ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி ஜோடியை சந்தித்தது. இதில் பிரார்த்தனா ஜோடி 3-6, 1-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.