/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
எம்மா ரடுகானு கண்ணீர் * பின் தொடர்ந்த மர்ம நபர்
/
எம்மா ரடுகானு கண்ணீர் * பின் தொடர்ந்த மர்ம நபர்
ADDED : பிப் 19, 2025 11:14 PM

துபாய்: துபாயில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் 22 வயது வீராங்கனை, பிரிட்டனின் எம்மா ரடுகானு, செக் குடியரசின் முசோவா மோதினர். முதல் செட்டில் ரடுகானு, 0-2 என பின்தங்கி இருந்த போது, திடீரென அம்பயரிடம் சென்று, கண்ணீர் விட்டு அழுதார். இதுகுறித்து முசோவா அருகில் சென்று விசாரித்தார்.
அடுத்த சில நிமிடத்தில், சம்பவம் குறித்து போட்டி நிர்வாகிகளிடம் தெரிவித்தார் அம்பயர். பின் எதுவும் தெரிவிக்காத ரடுகானு, மீண்டும் போட்டியை தொடர்ந்தார். இதில் 6-7, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இதுகுறித்து சர்வதேச பெண்கள் டென்னிஸ் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,'' கடந்த 17ம் தேதி பொது இடத்தில் ரடுகானுவை சந்தித்த நபர், மோசமான முறையில் நடந்து கொண்டார். மறுநாள் இரவு போட்டியில் பங்கேற்ற போது, மர்ம நபர் காலரியில் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தார். இவர் அடையாளம் காணப்பட்டு, மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். விசாரணை முடியும் வரை அவர், பெண்களுக்கான தொடர்களை காண தடை விதிக்கப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.