sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

காலிறுதியில் தக்சினேஷ்வர் ஜோடி

/

காலிறுதியில் தக்சினேஷ்வர் ஜோடி

காலிறுதியில் தக்சினேஷ்வர் ஜோடி

காலிறுதியில் தக்சினேஷ்வர் ஜோடி


ADDED : ஆக 20, 2024 11:32 PM

Google News

ADDED : ஆக 20, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வின்ஸ்டன்-சலேம்: ஏ.டி.பி., டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் தக்சினேஷ்வர் ஜோடி முன்னேறியது.

அமெரிக்காவில் ஆண்களுக்கான டென்னிஸ் (ஏ.டி.பி.,) தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தக்சினேஷ்வர், பிரிட்டனின் லுகா பவ் ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-6' அந்தஸ்து பெற்ற உருகுவேயின் ஏரியல் பெஹர், அர்ஜென்டினாவின் ஆன்ட்ரெஸ் மோல்டனி ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை 6-4 என தக்சினேஷ்வர் ஜோடி கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் 5-5 என சம நிலையில் இருந்த தக்சினேஷ்வர் ஜோடி, பின் 5-7 என இழந்தது.

வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட தக்சினேஷ்வர் ஜோடி, 10-8 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 18 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், தக்சினேஷ்வர் ஜோடி 6-4, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.






      Dinamalar
      Follow us