
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிபிளிசி: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் அரையிறுதிக்கு ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி முன்னேறியது.
ஜார்ஜியாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, பிரிட்டனின் ஒயிட்ஹவுஸ், டாம் ஹேண்ட்ஸ் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை இந்திய ஜோடி 6-4 என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த செட்டிலும் சிறப்பாக செயல்பட, 6-2 என வசப்படுத்தியது. 58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.