UPDATED : செப் 25, 2024 03:11 PM
ADDED : செப் 24, 2024 10:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாங்சு: ஹாங்சு ஓபன் டென்னிசில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி சாம்பியன் ஆனது.
சீனாவில், ஹாங்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஜெர்மனியின் கான்ஸ்டன்டின், ஹென்ரிக் ஜெபன்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 4-6 என இழந்தது.
இரண்டாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை இந்திய ஜோடி 7-6 என வசப்படுத்தியது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர் டைபிரேக்கரில்' 10-7 என இந்திய ஜோடி அசத்தியது. ஒரு மணி நேரம், 51 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 4-6, 7-6, 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.