/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
கோகோ காப் புதிய சாம்பியன் * டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடரில்...
/
கோகோ காப் புதிய சாம்பியன் * டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடரில்...
கோகோ காப் புதிய சாம்பியன் * டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடரில்...
கோகோ காப் புதிய சாம்பியன் * டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடரில்...
ADDED : நவ 11, 2024 12:29 AM

ரியாத்: டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடரில் முதன் முறையாக கோப்பை வென்றார் கோகோ காப்.
சவுதி அரேபியாவின் ரியாத்தில், டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ள 8 வீராங்கனைகள் பங்கேற்றனர். இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதலில் லீக் முறையில் போட்டி நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடம் பிடித்தவர்கள் அரையிறுதிக்கு முன்னேறினர்.
பைனலில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் குயின்வென் ஜெங் மோதினர். முதல் இரு செட்டை குயின்வென் (6-3), கோகோ காப் (6-4) மாறிமாறி கைப்பற்றினர். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'டை பிரேக்கரில்' குயின்வென், 7-6 என அசத்தினார்.
3 மணி நேரம், 7 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில், கோகோ காப் 3-6, 6-4, 7-6 என வென்று சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 40.50 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.
முதல் கோப்பை
டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடரில் இவர் வென்ற முதல் கோப்பை இது. செரினா வில்லியம்சிற்குப் பின் (2014), இத்தொடரில் கோப்பை வென்ற அமெரிக்க வீராங்கனை ஆனார். தவிர, 2004ல் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்குப் பின், இத்தொடரில் சாதித்த இளம் வீராங்கனை ஆனார் கோகோ காப்.