/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
யு.எஸ்., ஓபன்: சின்னர் சாம்பியன்
/
யு.எஸ்., ஓபன்: சின்னர் சாம்பியன்
ADDED : செப் 09, 2024 11:25 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் இத்தாலியின் சின்னர் கோப்பை வென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். முதலிரண்டு செட்களை 6-3, 6-4 எனக் கைப்பற்றிய சின்னர், மூன்றாவது செட்டை 7-5 என போராடி வென்றார்.
இரண்டு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஜானிக் சின்னர் 6-3, 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.
சின்னருக்கு, ரூ. 30 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த பிரிட்ஸ், ரூ. 15 கோடி பரிசாக பெற்றார்.