ADDED : செப் 04, 2024 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிசின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் வைதேகி சவுத்ரி.
தாய்லாந்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி, சக வீராங்கனை வைஷ்ணவியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை வைதேகி 6-2 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய வைதேகி, அடுத்த செட்டையும் 6-1 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் வைதேகி, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.