/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
விக்டோரியா எம்போகோ 'சாம்பியன்': கனடா ஓபன் டென்னிசில்
/
விக்டோரியா எம்போகோ 'சாம்பியன்': கனடா ஓபன் டென்னிசில்
விக்டோரியா எம்போகோ 'சாம்பியன்': கனடா ஓபன் டென்னிசில்
விக்டோரியா எம்போகோ 'சாம்பியன்': கனடா ஓபன் டென்னிசில்
ADDED : ஆக 08, 2025 08:35 PM

மான்ட்ரியல்: கனடா ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் கனடாவின் விக்டோரியா எம்போகோ சாம்பியன் பட்டம் வென்றார்.
கனடாவின் மான்ட்ரியல் நகரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பானின் நவோமி ஒசாகா 27, கனடாவின் விக்டோரியா எம்போகோ 18, மோதினர். முதல் செட்டை ஒசாகா 6-2 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட எம்போகோ, 2வது செட்டை 6-4 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய கனடா வீராங்கனை 6-1 என வென்றார்.
இரண்டு மணி நேரம், 4 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய எம்போகோ 2-6, 6-4, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சொந்த மண்ணில் கோப்பை வென்ற 3வது கனடா வீராங்கனையானார் எம்போகோ. இதற்கு முன் கனடாவின் பே அர்பன் (1969), பியான்கா (2019) இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.
சபாஷ் ஷெல்டன்: கனடாவின் டொரான்டோவில் நடந்த ஆண்களுக்கான ஏ.டி.பி., நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், ரஷ்யாவின் கரேன் கச்சானோவ் மோதினர். அபாரமாக ஆடிய ஷெல்டன் 6-7, 6-4, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது, இவரது 3வது ஏ.டி.பி., ஒற்றையர் பட்டம் ஆனது.
24வது இடம்
கனடா ஓபனில் அசத்திய எம்போகோ, கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான அமெரிக்காவின் சோபியா கெனின் (2வது சுற்று), கோகோ காப் ('ரவுண்டு-16'), கஜகஸ்தானின் ரிபாகினா (அரையிறுதி), ஜப்பானின் ஒசாகாவை (பைனல்) வீழ்த்தினார். இதனையடுத்து டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 85வது இடத்தில் இருந்து முதன்முறையாக 24வது இடத்துக்கு முன்னேறினார்.
* ஆண்கள் ஒற்றையரில் கோப்பை வென்ற ஷெல்டன், 6வது இடத்துக்கு முன்னேறினார். செர்பியாவின் ஜோகோவிச் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.