தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/விம்பிள்டன்: பைனலில் கரோலினா முசோவா

விம்பிள்டன்: பைனலில் கரோலினா முசோவா

விம்பிள்டன்: பைனலில் கரோலினா முசோவா


ADDED : ஜூலை 09, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 11:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு செக்குடியரசின் கரோலினா முசோவா முன்னேறினார்.

இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், அமெரிக்காவின் கோகோ காப், செக்குடியரசின் கரோலினா முசோவா மோதினர். முதல் செட்டை முசோவா 6-2 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட கோகோ காப், 2வது செட்டை 6-1 என வென்று பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதில் அசத்திய முசோவா 7-6 என தட்டிச் சென்றார்.

இரண்டு மணி நேரம், 35 நிமிடம் நீடித்த போட்டியில் கரோலினா முசோவா 6-2, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தார். இதற்கு முன், 2 முறை (2019, 2021) காலிறுதி வரை சென்றிருந்தார். தவிர இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 2வது முறையாக பைனலுக்கு முன்னேறினார். இதற்கு முன், 2023ல் பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தார்.

அரையிறுதியில் ஸ்வெரேவ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். இதில் ஸ்வெரேவ் 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் பிரிட்டனின் ஆர்தர் பெரி 6-4, 7-6, 6-0 என, இத்தாலியின் பிளாவியோ கோபோலியை வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us