ADDED : ஜூலை 01, 2024 11:05 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் 'நம்பர்-3' வீரர், ஸ்பெயினின் அல்காரஸ், தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய எஸ்தோனியாவின் மார்க் லஜலை சந்தித்தார்.
'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை அல்காரஸ் 7-6 என கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த இரு செட்டுகளையும் 7-5, 6-2 என கைப்பற்றினார்.
முடிவில் அல்காரஸ், 7-6, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் டென்மார்க்கில் காஸ்பர் ரூடு, இத்தாலியின் பாக்னினி, பல்கேரியாவின் டிமிட்ரோவ், ரஷ்யாவின் மெத்வெடேவ், சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
மரியா வெற்றி
பெண்கள் ஒற்றையரில் நேற்று முதல் சுற்று போட்டி நடந்தன. கிரீசின் மரியா சக்காரி, 6-3, 6-1 என அமெரிக்காவின் கெஸ்லெரை வீழ்த்தினார். ரஷ்யாவின் பவ்லிசென்கோவா, 7-6, 6-1 என அமெரிக்காவின் டவுன்சென்ட்டை சாய்த்தார். ரஷ்யாவின் கசட்கினா, பெல்ஜியத்தின் மெர்டென்ஸ், இத்தாலியின் பாவோலினி, ஜப்பானின் ஒசாகா வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.