ADDED : மார் 02, 2025 08:22 PM

துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆஸ்திரேலியாவின் பாபிரின் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
துபாயில், ஏ.டி.பி., சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் இரட்டையர் பைனலில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் ஜோடி, பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா, பிரிட்டனின் ஹென்றி பாட்டன் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 3-6 என இழந்த இந்தியா, ஆஸ்திரேலியா ஜோடி, 'டை பிரேக்கர்' வரை சென்ற இரண்டாவது செட்டை 7-6 எனக் கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய பாம்ப்ரி ஜோடி 10-8 என வென்றது. ஒரு மணி நேரம், 51 நிமிடம் நீடித்த போட்டியில் யூகி பாம்ப்ரி, அலெக்சி பாபிரின் ஜோடி 3-6, 7-6, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.