ADDED : பிப் 23, 2025 01:20 AM
அரியலுார் மாவட்டம், அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரி, 37. இவர், கணவருடன் வாழாமல், தந்தை வீட்டில் வசித்தார். 2019ல், இதே கிராமத்தைச் சேர்ந்த அசோக்ராஜ், 25, வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அத்தை முறையான சிவசங்கரியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இதனால் சிவசங்கரி கர்ப்பமானார்.
சிவசங்கரி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையறிந்த அசோக்ராஜ், ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். 4 வயதில் ஆண் குழந்தை உள்ள சிவசங்கரி, தனியாக வசித்த நிலையில், தலைமறைவாக இருந்த அசோக்ராஜ் நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினார்.
சிவசங்கரி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிந்து, அசோக்ராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அப்பா லட்சுமிகாந்தி, 65, சித்தப்பா ராமகிருஷ்ணன், 55, ஆகிய மூவரையும் கைது செய்தார்.