/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
பத்திரப் பதிவுக்கு ரூ.1500 லஞ்சம் அலுவலர், உதவியாளர் கைது
/
பத்திரப் பதிவுக்கு ரூ.1500 லஞ்சம் அலுவலர், உதவியாளர் கைது
பத்திரப் பதிவுக்கு ரூ.1500 லஞ்சம் அலுவலர், உதவியாளர் கைது
பத்திரப் பதிவுக்கு ரூ.1500 லஞ்சம் அலுவலர், உதவியாளர் கைது
ADDED : ஜூலை 06, 2024 02:49 AM
அரியலுார்:அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பத்திரப் பதிவுக்கு ரூ.1500 லஞ்சம் வாங்கிய பத்திரப் பதிவு அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம், கரடிகுளம், சோழியன் தெருவைச் சேர்ந்தவர் கி.சாக்ரடீஸ். இவர் தனது நிலத்தை மகன் பெர்னாட்ஷா பெயரில் மாற்ற குமரன் நகரிலுள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை அணுகிய போது, சார்பதிவாளர் பிரகாஷ் ரூ.1500 தர வேண்டும் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சாக்ரடீஸ், இதுகுறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸôரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôர் அறிவுரையின் படி ரசாயனம் தடவிய பண நோட்டுகளை பெற்றுக் கொண்ட சாக்ரடீஸ், அதனை அலுவலக உதவியாளர் சிவசக்திவேலிடம் வெள்ளிக்கிழமை கொடுத்துள்ளார். இதையடுத்து சிவசக்திவேல் அந்த பணத்தை பத்திரப் பதிவு அலுவலர் பிரகாஷிடம் வழங்கியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், பத்திரப் பதிவு அலுவலர் பிரகாஷ், அலுவலக உதவியாளர் சக்திவேல் ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.