/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
வேளாண் அதிகாரியிடம் ரூ.4.40 லட்சம் பறிமுதல்
/
வேளாண் அதிகாரியிடம் ரூ.4.40 லட்சம் பறிமுதல்
ADDED : ஆக 22, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள வேளாண் விரிவாக்கம் மைய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வேளாண் உதவி இயக்குனர் எழில்ராணி அறையில் இருந்த கணக்கில் வராத 4.40 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். தொடர்ந்து, எழில்ராணி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் நடந்த சுதந்திர தின விழாவில், சிறப்பாக பணி புரிந்ததாக, எழில்ராணிக்கு, கலெக்டர் ரத்தினசாமி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார், என்பது குறிப்பிடத்தக்கது.