/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
வீட்டில் நால்வர் உடல் மீட்பு கொலையா என விசாரணை
/
வீட்டில் நால்வர் உடல் மீட்பு கொலையா என விசாரணை
ADDED : ஏப் 13, 2024 02:16 AM
வளவனேரி:அரியலுார் மாவட்டம், வளவனேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 41, இவரது மனைவி பானுமதி, 35, இவர்களுக்கு பிரசாத், 12, இரட்டை குழந்தைகளான சாத்விக், 2, சாத்விகா, 2, ஆகிய மூன்று குழந்தைகள் இருந்தனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், பானுமதி குழந்தைகளுடன் வளவனேரி கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை பானுமதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் வீட்டை திறக்க முயன்ற போது, உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டியிருந்தது.
கதவை உடைத்து பார்த்த போது மூன்று குழந்தைகள் தரையிலும், பானுமதி துாக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனர். நால்வரின் உடல்களையும் மீட்ட மீன்சுருட்டி போலீசார் கொலையா என விசாரிக்கின்றனர்.

