/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
/
கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 19, 2011 12:49 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட செம்பியக்குடி கிராமத்தில், மாவட்ட கால்நடை பாதுகாப்புதுறை மூலம் நடந்த, சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு மருத்துவ முகாமில், மாடு, ஆடு உள்ளிட்ட 1,887 கால்நடைகள் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது. இவற்றில் 58 கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சையும், 30 கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டலும், 62 கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும், 17 கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சையும், 701 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சையும், 19 கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கமும், 1,000 கால்நடைகளுக்கு அடைப்பான் நோய்க்கான தடுப்பூசியும் போடப்பட்டது.மருத்துவ முகாமில், இளங்கிடேரி கன்றுகளை சிறப்பாக பராமரித்த 10 நபர்களுக்கு பரிசும், பருவ ஒருங்கிணைப்பு தேர்வு செய்யப்பட்ட தாது உப்பு, குடற்புழு நீக்க மருந்து மூன்று நபர்களுக்கும், மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ், எம்.எல்.ஏ., துரை மணிவேல் உள்ளிட்டோர் வழங்கினர்.நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் டாக்டர் மோகனரங்கன், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் செம்பியக்குடி காமராஜ், குலமாணிக்கம் ஜெய்சங்கர், கால்நடை உதவி டாக்டர்கள் பாஸ்கரன், கார்த்திகேயன், செல்லபாண்டி, சுரேஷ், முருகேசன், வி.ஏ.ஓ., ராஜய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.