/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
மின்னல் தாக்கியதில் மூதாட்டி உடல் கருகி பலி
/
மின்னல் தாக்கியதில் மூதாட்டி உடல் கருகி பலி
ADDED : ஏப் 05, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியலுார்:அரியலுார் அருகே, மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி உடல் கருகி பலியானார்.
அரியலுார் மாவட்டம், மதுரா சித்துடையார் கிராமத்தை சேர்ந்தவர் இந்திராகாந்தி, 62. இவர், நேற்று தன் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே இந்திராகாந்தி உடல் கருகி பலியானார்.
குவாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல், பெருமாண்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது இரண்டு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகின.