/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
திருமானூர் அருகே மரத்தில் கார் மோதி தந்தை, மகன் பலி
/
திருமானூர் அருகே மரத்தில் கார் மோதி தந்தை, மகன் பலி
திருமானூர் அருகே மரத்தில் கார் மோதி தந்தை, மகன் பலி
திருமானூர் அருகே மரத்தில் கார் மோதி தந்தை, மகன் பலி
ADDED : நவ 27, 2024 05:43 PM

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் தந்தையும், மகனும் உயிரிழந்தனர்.
அரியலூர் அருகேயுள்ள சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து மகன் செல்வராஜ்(56). குடும்பத்தினருடன் சென்னை வியாசர்பாடியில் வசித்து வந்த இவர், மனைவி மாலதி(50), மகன் விக்னேஷ்(30), மருமகள் ஜெயலட்சுமி(26) ஆகியோருடன் அரியலூர் அடுத்த கடம்பூரில் வசிக்கும் மகள் புனிதவள்ளி வீட்டுக்கு காரில் வந்திருந்தார். அங்கு கோயிலுக்குச் சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அவர், புனிதவள்ளி குழந்தைகள் தினேஷ்(8),சகானா(6) ஆகியோரையும் காரில் அழைத்துக் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு புறப்பட்டார்.
கார் திருமானூர் அருகே உள்ள சத்திரத்தேரி பகுதியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதையறிந்த திருமானூர் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிந்தது. போலீசார், கார் இடிப்பாடுகளில் காயத்துடன் சிக்கியிருந்த விக்னேஷ், மாலாதி, ஜெயலட்சுமி, தினேஷ், சகானா ஆகியோரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விக்னேஷ் உயிரிழந்தார். விபத்துக் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.