/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
ஜவுளி கடையில் தீ ரூ.10 லட்சம் இழப்பு
/
ஜவுளி கடையில் தீ ரூ.10 லட்சம் இழப்பு
ADDED : அக் 22, 2025 07:48 PM

அரியலுார்: அரியலுார் தேரடி சண்முகா என்ற துணிக்கடையில், அக்., 20 இரவு, புகை வருவதை கண்ட ரோந்து போலீசார், துணிக்கடை உரிமையாளர், டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அரியலுார், செந்துறை மற்றும் தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடையின் இரும்பு கதவை பொக்லைன் இயந்திரம் கொண்டு உடைக்கப்பட்ட பின், தீயணைப்பு வீரர்கள் உள்ளே புகுந்தனர்.
இருப்பினும், கடையில் வைத்திருந்த, 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் தீபாவளிக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த புதிய ரக துணிகள், கம்ப்யூட்டர் சாதனங்கள், மின்சார சாதனங்கள், பர்னிச்சர்கள் என, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.