/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
பொது - பெண் காவலரிடம் சில்மிஷம் வடமாநில வாலிபர் கைது
/
பொது - பெண் காவலரிடம் சில்மிஷம் வடமாநில வாலிபர் கைது
பொது - பெண் காவலரிடம் சில்மிஷம் வடமாநில வாலிபர் கைது
பொது - பெண் காவலரிடம் சில்மிஷம் வடமாநில வாலிபர் கைது
ADDED : செப் 03, 2025 12:36 AM
சென்னை, சென்னை பல்கலை பேருந்து நிறுத்தத்தில், பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வடமாநில வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும், 28 வயது பெண் காவலர், தன்னுடன் பணிபுரியும் மற்றொரு பெண் காவலருடன், கடந்த 31ம் தேதி மாலை, மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.
இருவரும், வீட்டிற்கு செல்வதற்காக சென்னை பல்கலை நிறுத்தத்தில், பேருந்திற்காக இரவில் காத்திருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், 28 வயது பெண் காவலரை பார்த்து, ஆபாச சைகை செய்துள்ளனர்.
பெண் காவலர்கள் திட்டியதும், அங்கிருந்து இருவரும் புறப்பட்டு சென்றனர். பின், சிறிது நேரத்திலேயே மீண்டும் வந்த இருவரில் ஒருவர், வாகனத்தை நிறுத்தி, காவலரின் கையை பிடித்து தகாத முறையில் நடந்துள்ளார்.
பெண் காவலர் சத்தம் போடவே, அந்நபர் வாகனத்தை விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணையில், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த தீப்நாராயண சுக்லா, 33, என்பவர் பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தெரிந்தது. கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் பதுங்கியிருந்த அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.