/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: பொது மக்கள் பீதி
/
அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: பொது மக்கள் பீதி
அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: பொது மக்கள் பீதி
அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: பொது மக்கள் பீதி
ADDED : ஏப் 12, 2024 03:28 PM
பெரம்பலூர்: மயிலாடுதுறை கூறைநாடு, செம்மங்களம் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டத்தை மக்கள் பார்த்ததை தொடர்ந்து, அதனை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் தீயணைப்புத்துறை, போலீசார் ஈடுபட்டனர். கடந்த 7 நாட்களாக சிறுத்தையை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த சிறுத்தையானது அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி பகுதியில் முகாமிட்டு உள்ளது. முந்திரிக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் குறித்து பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
இந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு செந்துறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பயத்துடன் வெளியேறினர். சிறுத்தை கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மருத்துவமனை அருகே உள்ள டாக்டர் வீடு பகுதியில் சிறுத்தை நடமாடி உள்ளது. இது தொடர்பாக மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட சிறப்பு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், செந்துறைப் பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது. மேலும் சிறுத்தை நடமாட்டத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

