/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
சொத்து கேட்டு போராடும் 'ஸ்ட்ரெச்சர்' மூதாட்டி
/
சொத்து கேட்டு போராடும் 'ஸ்ட்ரெச்சர்' மூதாட்டி
ADDED : செப் 25, 2024 01:19 AM

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லம்மாள், 85, என்பவர் அரியலுார் கலெக்டர் ரத்தினசாமியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:
என் கணவர் இறந்த பிறகு, மகன்கள் என்னை கவனிக்கவில்லை. கீழே விழுந்து கால்கள் முறிந்து, படுத்த படுக்கையில் இருந்து வரும் என்னை, என் மகள் தனபாக்கியம் தான், 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறார்.
மேட்டுப்பாளையம், காவேரிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் எங்களுக்கு பொதுவான, 10 ஏக்கர் நிலத்தை என் மகன்கள் இருவரும், அனுபவித்து வந்த நிலையில், தற்போது எனக்கே தெரியாமல், அவர்களுக்குள்ளே பிரித்துள்ளனர்.
போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, என் மகன்கள் அபகரித்துள்ள சொத்தை, கலெக்டர் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த அவர், படுத்த படுக்கையாக கலெக்டர் கூட்டரங்கிற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் மனுவை பெற்ற கலெக்டர் மற்றும் அதிகாரிகள், பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர்.