/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிறுவனங்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
நிறுவனங்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜன 15, 2024 01:52 AM
செங்கல்பட்டு : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்பிற்கான கடனுதவி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், சமீபத்தில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்பிற்கான நிதியுதவி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வரும் 31ம் வரை நடைமுறையில் இருக்கும். இந்த சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மறைமலைநகர் கிளையை தொடர்பு கொள்ளலாம். மேலும், https;//www.tiic.org என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.