/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்; மாமல்லையில் சுகாதார சீர்கேடு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்; மாமல்லையில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்; மாமல்லையில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்; மாமல்லையில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 15, 2024 01:53 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரம், கடற்கரை சாலை பகுதியில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஆரோவில் கட்டண கழிப்பறை இயங்குகிறது. இதை, தனியார் குத்தகை உரிமம் பெற்று நடத்துகிறது.
ஏற்கனவே குளியலறைகள், கழிப்பறைகள் கட்டப்பட்டு இருந்தன. தற்போது, கூடுதலாக கழிப்பறை மற்றும் குளியலறைகள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், இதிலிருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக வெளியேற்றும் கட்டமைப்புகள் இல்லை. திருக்குள தெரு சந்திப்பு பகுதியில், கழிவுநீர் அடிக்கடி பெருக்கெடுத்து ஓடுவது வாடிக்கையாகி உள்ளது.
தற்போது, மாமல்லைக்கு வரும் ஆதிபராசக்தி பக்தர்கள் ஏராளமானோர் பயன்படுத்தும் சூழலில், கழிவுநீர் முறையாக அகற்றப்படவில்லை.
மேலும், கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில், கழிவுநீர் குளம்போல் தேங்குகிறது. பல நாட்களாக தேங்கியிருப்பதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது.
விடுதிகளுக்கு செல்லும் சர்வதேச பயணியர், திருக்குள தெருவில் வசிப்பவர்கள், கடற்கரை கோவில் செல்லும் பயணியர், கழிவுநீரில் அருவருப்புடன், நோய் பரவும் அச்சத்துடன் செல்கின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகம், சாலையில் கழிவு நீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.