/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா செடி வளர்த்த நான்கு பேர் கைது
/
கஞ்சா செடி வளர்த்த நான்கு பேர் கைது
ADDED : ஜன 15, 2024 02:00 AM
திருப்போரூர் : காயார் காவல் எல்லையில் கஞ்சா விற்கப்படுவதாகவும், கஞ்சா செடி வளர்ப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், காட்டூர் கிராமத்தில் சோதனை செய்தனர். அப்போது, விவசாய நிலம் அருகே மூன்று பேர் தப்பியோடினர். அவர்களை மடக்கி பிடித்தனர்.
மேலும், அந்த இடத்தில் ஆய்வு செய்தபோது, கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது. விசாரணையில் கந்தன்சாவடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், 23, விஷ்ணு, 25, திருப்போரூரை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ், 24, என தெரிந்தது. மேலும், இந்த நிலத்தில் ஆறு கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த குத்தகை நிலத்தை பராமரித்து வரும் மகேஷ், 44, உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார் கஞ்சா செடிகளையும், 1 கிலோ கஞ்சா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.