/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காவல்துறை பொங்கலை டி.ஜி.பி., துவக்கிவைப்பு
/
காவல்துறை பொங்கலை டி.ஜி.பி., துவக்கிவைப்பு
ADDED : ஜன 15, 2024 01:59 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில், சமத்துவ பொங்கல் விழாவை, மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், நேற்று, துவக்கி வைத்தார்.
இதில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், காஞ்சிபுரம் சரகம் காவல்துறை துணை தலைவர் பொன்னி, மாவட்ட கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில், கபடி போட்டி, உறியடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இந்தபோட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு, காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால், பரிசுகளை வழங்கினார்.
l கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் நேற்று, பொங்கல் விழாவை முன்னிட்டு, காவல் நிலையம் வண்ணக்கோலங்களால் நிறைந்து காணப்பட்டது. பெண் போலீசார் ஒரே கலர் சேலையில் வலம் வந்தனர்.
இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வேஷ்டி சட்டையில் பங்கேற்றனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் பங்கேற்று, பொங்கல் விழாவை சிறப்பித்தார்.
l மறைமலை நகர் காவல் நிலையத்தில், நேற்று, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பெண் போலீசார் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்த சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
l மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.