/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னை - கடலுார் ரயில்பாதைக்கு 3 ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு
/
சென்னை - கடலுார் ரயில்பாதைக்கு 3 ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு
சென்னை - கடலுார் ரயில்பாதைக்கு 3 ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு
சென்னை - கடலுார் ரயில்பாதைக்கு 3 ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 26, 2024 11:14 PM
மாமல்லபுரம்:
சென்னை - கடலுார் இடையிலான 180 கி.மீ., கடலோர ரயில் பாதை திட்டத்திற்கு, கடந்த 2007ல், ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. 2008 - 09 ரயில்வே பட்ஜெட்டில், இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.
துவக்கத்தில், சென்னை பெருங்குடி மாடி ரயில் மேம்பால பாதையிலிருந்து, கடலோர தட ரயில் பாதையை துவக்கி, மாமல்லபுரம் வழியாக கடலுார் வரை அமைக்க திட்டமிடப்பட்டது.
மேம்பால பாதையில் சரக்கு ரயில் இயக்குவது சாத்தியமில்லாதது எனக்கருதிய ரயில்வே நிர்வாகம், சென்னையிலிருந்து, செங்கல்பட்டு, மாமல்லபுரம், கடலுார் என, ரயில்பாதை அமைக்க முடிவெடுத்தது.
நாளடைவில், அதுக அளவிலான திட்ட செலவு கருதி, அத்திட்டம் கைவிட முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டு, கடந்த 2022ல் 50 கோடி ரூபாயும், கடந்த ஆண்டு 25 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போதும், 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில், மொத்தமாக 100 கோடி ரூபாய் மட்டுமே, சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, சில ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், குறைவான தொகையே ஒதுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.