/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
100 சதவீத ஓட்டளிப்பு கோலம் வரைந்து விழிப்புணர்வு
/
100 சதவீத ஓட்டளிப்பு கோலம் வரைந்து விழிப்புணர்வு
ADDED : மார் 26, 2024 11:19 PM

திருப்போரூர்:லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருப்போரூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில், கந்தசுவாமி கோவில் நுழைவாயிலில், அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று தேர்தல் விழிப்புணர்வு கோலம் வரைந்தனர்.
தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும்; நேர்மையுடன் ஓட்டளிக்க வேண்டும் என, அங்கு அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும், ஓட்டளிப்பதில் பெருமை கொள்வோம்; இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் என, முதல் முறையாக ஓட்டளிக்க செல்லும் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்தினர்.

